‘அலர்ட்’…தமிழக – கேரள எல்லையில் ஊடுருவும் மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் : புகைப்படத்துடன் புதிய லிஸ்ட் வெளியீடு!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2023, 11:03 am

தமிழக – கேரள எல்லையில் ஊடுருவும் மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள் : புகைப்படத்துடன் புதிய லிஸ்ட் வெளியீடு!!!

கேரளா – தமிழகம் எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகளை கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கேரள தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் மாவோயிஸ்டுகளின் புகைப்படங்களை கொண்டு போலீசார் சோதனை மேற்கொள்வது வழக்கம். அதன் தொடர்ச்சியாக கோவையில் தமிழக கேரள எல்லை சோதனை சாவடிகளில் ஒன்றான மாங்கரை சோதனை சாவடியில் புதிதாக மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் இவர்களில் யாரையேனையும் பார்த்தால் தடாகம் காவல் நிலையம்- 887016993, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம் 9498101166, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 9498101165 ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 347

    0

    0