ஊழல் செய்த அமைச்சர்களை வைத்து ஸ்டாலினால் நல்லாட்சி தர முடியுமா..? முன்னாள் அமைச்சர் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
23 September 2022, 8:42 am

ஊழல் செய்த அமைச்சர்களை அருகில் வைத்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலினால் எப்படி தமிழகத்தில் நல்ல ஆட்சி தர முடியும் என்று முன்னாள் அமைச்சர் S.P சண்முகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தூத்துக்குடி டூவிபுரத்தில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முக நாதன் :- திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றறை ஆண்டுகள் ஆகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழகத்திற்கு ஏதாவது புது திட்டத்தை ஸ்டாலின் கொண்டு வந்துள்ளாரா இல்லை. அதற்கு மாறாக பழிவாங்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரைடு நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ஒருமுறை, இரண்டு முறை அல்ல 4, 5 முறை ரைடு நடைபெற்றது.

ரைடில் எடுத்ததை காட்ட முடியுமா..? அதிமுகவின் மீது பொய் வழக்கு போடுவதற்காகவே இந்த ரைடு நடைபெற்றது. இன்று திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் என பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. ஊழல் செய்த அமைச்சர்களை அருகில் வைத்துக் கொண்டு ஸ்டாலினால், எப்படி தமிழகத்தில் நல்ல ஆட்சி தர முடியும்.

திமுக மட்டும் தான் மக்களுக்காக போராடுகின்ற ஒரே இயக்கம். மற்ற எந்த கட்சிகளும் மக்களுக்காக போராடவில்லை, என்றார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 429

    0

    0