200வது தோள்சீலைப் போராட்ட நினைவு மாநாடு… முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க அகில பார இந்து மகா சபா எதிர்ப்பு…

Author: Babu Lakshmanan
3 March 2023, 3:53 pm
Quick Share

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற உள்ள தோள்சீலைப் போராட்ட நினைவு மாநாட்டை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும் என அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வரும் ஆறாம் தேதி தோள்சீலை போராட்ட 200வது நினைவு மாநாடு நடைபெற உள்ளது. இதில், தமிழக முதல்வர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்படும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், அமைப்பு நிர்வாகிகளுடன் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற உள்ள தோள்சீலைப் போராட்ட நினைவு மாநாட்டு மூலம் தேவையற்ற ஜாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக முதலமைச்சர் இதனைப் புறக்கணிக்க வேண்டும்,” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், 200 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரர்களின் சூழ்ச்சியால் ஜாதி பிரச்சனையை உருவாக்கி, மத மாற்றும் சூழலை உருவாக்கினார். மன்னர் ஆட்சி காலத்தில் திருவிதாங்கூர் மன்னரை கட்டுக்குள் வைத்து மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தி ஜாதி துவேசத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்காக நூறாவது நினைவு ஆண்டு, 150ஆவது நினைவு ஆண்டு என எதுவுமே கொண்டாடப்படாத வேளையில், 200வது ஆண்டு நினைவு மாநாடு நடத்துவது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால், தமிழக முதல்வர் இதில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்தார்.

  • sivakarthikeyan-updatenews360அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் – செம லவ்வா இருக்கே – வீடியோ!
  • Views: - 640

    0

    0