சினிமா படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறிய உதயநிதி ஸ்டாலின்.. என்ன சொல்ல போகிறார் முதலமைச்சர்..?

Author: Rajesh
5 April 2022, 5:59 pm

விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில், தங்களது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது ரெட் ஜெயன்ட் மூவிஸ். ஒரு சமயத்தில் ரெட் ஜெயன்ட் மற்றும் சன் குடும்பத்தின் ஆதிக்கம் தமிழ் சினிமா துறையில் கொடிகட்டி பறந்தது என்றே கூறலாம். பல முன்னணி நடிகர்களின் படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோகித்தால் அதற்கு எதிராக பலர் செயல்பட்டு வந்தாகவும் கூறப்பட்டது.

இதனால் பல தயாரிப்பு நிறுவனமும் பெரிய சரிவை சந்தித்தது. இதனால்தான் கடந்த முறை தேர்தலில் திமுக தோற்றதற்கு முக்கிய காரணம் எனவும் பெரும் அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிதாக வெளியாகும் எல்லா படங்களையுமே ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்குகிறது.

குறிப்பாக, கடந்த ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தான் விநியோகித்தது. மேலும் தற்போது வெளியான விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் எதற்கும் துணிந்தவன், ராதேஷ்யாம் போன்ற படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது.

மேலும், தற்போது சிவகார்த்திகேயனின் டான், காத்துவாக்குல 2 காதல், பொன்னியின் செல்வன் போன்ற பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களையும் ரெட் ஜெயிண்ட்டே பண்ணுகிறது. இந்நிலையில் விஜயின் பீஸ்ட், கமலஹாசனின் விக்ரம் படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு எல்லா படங்களையும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பண்ணுவதால் மற்ற தயாரிப்பாளர்கள் பெரும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். மேலும் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கின்றனர். இதனால் கூடிய விரைவில் இந்த பிரச்சனையை தமிழக முதலமைச்சரிடம் கொண்டு சொல்ல சில தயாரிப்பு நிறுவனங்கள் முடிவெடுத்தள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின்தான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைவர். எந்த அளவுக்கு இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் தயாரிப்பாளர்களுக்காக முதல்வர் இதைப்பற்றி யோசிக்கலாம் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ