தமிழகம் முழுவதும் கண்ணீரில் தேமுதிகவினர்… மௌன அஞ்சலி செலுத்தும் போது தேம்பி தேம்பி அழுத தொண்டர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2023, 8:03 pm

தமிழகம் முழுவதும் கண்ணீரில் தேமுதிகவினர்… மௌன அஞ்சலி செலுத்தும் போது தேம்பி தேம்பி அழுத தொண்டர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சி எதிராக தேமுதிக கட்சியினர் சார்பில் திருவாரூர் நகர செயலாளர் சதீஷ் தலைமையில் மாநில விவசாய அணி செயலாளர் முத்தையாவுடன் தொண்டர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு ஊதுவத்தி ஏத்தி வைத்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தொண்டர்கள் கண்ணீர் மல்க அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் அழுத நிகழ்வு கல்நெஞ்சத்தையும் கண்ணீர் வர வைத்தது.

  • Rashmika Mandanna துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?