அடகு வைத்த நகை எல்லாம் அபேஸ் : 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, ரூ.25 லட்சம் ரொக்கம் துணிகர கொள்ளை.. போலீசார் விசாரணை!!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2022, 4:07 pm

திருப்பூர் : தனியார் நகை அடகு கடையில் 3 கிலோ தங்கம் 9 கிலோ வெள்ளி மற்றும் 25 லட்ச ரூபாய் பணம் கொள்ளை சம்பவ இடத்தில் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக நகை அடகுக்கடை இருந்து வருகிறது . கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நகைக்கடை நடத்தி வரக் கூடிய சூழ்நிலையில் கடைக்கு பின்புறமாக வீட்டில் குடியிருந்து வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வீட்டை காலி செய்து வேறு ஒரு பகுதியில் குடியேறிய நிலையில் பின்புறம் உள்ள வீடு காலியாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று இன்று காலை வந்த கடையை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடை உரிமையாளர் ஜெயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கடையில் இருந்த மூன்று கிலோ தங்கம் 9 கிலோ வெள்ளி மற்றும் 25 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடவயியல் நிபுணர்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Rajini took the actress who was shooting in the car படப்பிடிப்பில் இருந்த நடிகையை காரில் போட்டு தூக்கிச் சென்ற ரஜினி.. பல நாள் பிறகு வெளியான உண்மை!