All Souls Day : கல்லறை திருநாள் அனுசரிப்பு… கோவையில் கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2022, 11:53 am

கோவையில் கல்லறை திருநாளையொட்டி கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்‍கப்பட்டு வருகின்றது. இதையடுத்து கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்‍கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்‍கும் பணியில் ஈடுபட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கோவையில் உள்ள அனைத்து கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.இதில் கிறிஸ்தவ மக்கள் அநேகர் தங்களது முன்னோர்களின் கல்லறையில் இருக்கும் சீரமைத்து வர்ணம் பூசி கல்லறைகளை அலங்கரித்து மலர் தூவி, மெழுகுவர்த்தி பற்ற வைத்து பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டனர்.

  • Chennai 28 part 3 விரக்தியில் வெங்கட் பிரபு எடுத்த முடிவு…சாதகமாக அமையுமா..!
  • Close menu