திமுகவில் உள்ள 32 அமைச்சர்களும் இப்ப இங்க வந்துட்டாங்க : பகீர் கிளப்பிய ஜிகே வாசன்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2023, 10:43 am

தமாக அதிமுக கூட்டணி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனுக்கு இச்சடி பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி கே வாசன், தமாகா அதிமுக கூட்டணி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

எங்களுடைய கூட்டணியில் பாஜக உள்ளது தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக அரசின் எதிர்மறை ஓட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இது எங்களது வெற்றியை உறுதி செய்யும்.

இரண்டு நாட்களில் நல்ல முடிவு வெளிவரும்.பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பாடு நன்றாக உள்ளதால் பாஜக தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது

தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக நின்றால் சிறப்பாக இருக்கும் என்பதாக தாமாக அதிமுகவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது

இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் நின்றால் தான் அதிமுக வெற்றி பெற சூழ்நிலை உள்ளது

தமாகா அதிமுக கூட்டணியில் ஏற்கனவே பாஜக உள்ளது அதே நிலை தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியலில் நம்பிக்கைதான் மிக முக்கியம் அதிமுக பிரச்சனை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசியலில் நேர்மறையான கருத்துக்களை மட்டுமே நினைப்பவன் நான். இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் செயல்பாடு அது வேகமாக இருக்கும் தற்போது 32 அமைச்சர்களை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு திமுக நியமித்துள்ளது

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 530

    0

    0