‘உக்ரைனில் சிக்கி தவித்த புதுவை மாணவர்கள் அனைவரும் வந்துவிட்டனர்’: முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி..!!

Author: Rajesh
15 March 2022, 6:17 pm

புதுச்சேரி: உக்ரைனில் சிக்கி இருந்த புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த 27 மாணவர்களும் புதுச்சேரி திரும்பிவிட்டதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் இருந்த பழைய சாராய வடிகால் ஆலை இடிக்கப்பட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ரூ.12 கோடி மதிப்பில் தங்கும் அறைகள், அரங்கம் ஆகியவை கட்டுப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ரங்கசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி 2 மாதங்களில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் கட்டப்பட்டு வரும் தங்கும் அறைகள் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் கட்டிட பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொள்ள முடியாத நிலையில் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் உக்ரைனில் சிக்கி இருந்த புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த 27 மாணவர்களும் புதுச்சேரி திரும்பி உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!