வழிப்பறி கொள்ளையனுக எல்லாம் எங்க ஊர்ல தான் இருக்காங்க : அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan9 April 2023, 3:57 pm
வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடைபிள்ளையார் கோவில் அருகே அருகே ரூ15 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழல் கூடம் மற்றும் காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் மற்றும் 8 லட்சம் மதிப்பில் நியாய விலை கடைகளை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமானதாக இருந்ததில்லை என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.
ஆனால் தற்போது தமிழ்நாட்டில் அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் பொருட்கள் தரமான பொருட்களாக இருக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் காரணமாக அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்கள் தற்பொழுது விநியோகிக்கப்பட்டு வருகிறது.
காட்பாடியில் 200 படுக்கையில் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை இந்தாண்டு துவக்கப்படும். காட்பாடியில் கூடுதலாக ரயில்வே அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காட்பாடியில் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக காவல் நிலையம் போன்ற அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு காட்பாடியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும்
இதன் மூலம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசினார்
இந்த நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் காட்பாடி வடக்கு பகுதி திமுக செயலாளர் வன்னியராஜா வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன் துணைத்தலைவர் சரவணன் திமுக பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஜி.பி.கமல்ராஜ், 5-வது வட்டச் செயலாளர் விநாயகம் வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அன்பு, டீட்டா சரவணன், சித்ரா மகேந்திரன், சித்ரா லோகநாதன், விமலா சீனிவாசன், லோகநாதன், பூஞ்சோலை சீனிவாசன் உட்பட பலர் மற்றும் திமுகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்