திமுகவுடன் கூட்டணியா? நாடாளுமன்ற தேர்தல் குறித்து ம.நீ.ம ஆலோசனை : கமல்ஹாசன் பளிச் பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2022, 6:19 pm

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் செய்யக் கூடாது என ம.நீ.ம. நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் பேசினோம். கூட்டணி குறித்து விவாதித்துக் கொண்டு உள்ளோம். இப்போது, விவரிக்க முடியாது.

தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்தாலும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும் எனறு கூறினார்.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!