மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி? பாஜக நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு… தமிழகம் வரும் பொறுப்பாளர்!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2024, 11:05 am

மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி? பாஜக நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு… தமிழகம் வரும் பொறுப்பாளர்!

தமிழகத்திற்கு மாநில் தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளராக ஸ்ரீதர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அரவிந்த் மேனன் 2014, 2017 உத்திர பிரதேச தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றியவர்.

இதுபோன்று புதுச்சேரிக்கு மாநில பொறுப்பாளராக நிர்மல் குமார் சுரானா அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், மக்களவை தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழகம் வருகை தருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த் மேனன் தமிழகம் வருகிறார். தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல், கூட்டணி, தொகுதி மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார் என கூறப்படுகிறது.

மேலும், தேசிய பொறுப்பாளர்கள் தமிழக பாஜக நிர்வாகிகளை முதற்கட்டமாக சந்திக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!