Categories: தமிழகம்

கூட இருந்தே திமுக ஆட்சிக்கு குழி பறிக்கும் கூட்டணி கட்சிகள் : CM ஸ்டாலினுக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் எச்சரிக்கை!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு இந்து முன்னனி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்ரமணியம் வருகை தந்தார்‌. மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த காடேஷ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி இந்து விரோத ஆட்சி என்றும், இந்து என்ற வார்த்தையையே உபயோகிக்க கூடாது என்றும் சொல்லும் நபர்களை வளர்த்து வரும் ஆட்சி என்றும், மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் கோவில் வழிபாடுகளில் அரசும், அரசு அதிகாரிகளும் தலையிடுவதை கண்டிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக பழனி கோவிலில் பல நூறாண்டு காலமாக நடைபெறும் வழிபாட்டு முறைகள் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் கோவில் அதிகாரிகள் தலையிட்டு அவற்றை அழிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்தநிலை தொடர்ந்தால் பழனியில் இந்து முன்னனி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சியை கவிழ்க்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடனுள்ள கட்சித் தலைவர்களே காரணமாக இருப்பார்கள் என்றும், அந்த ஆபத்தை உணர்ந்து ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலையத்துறையை பிரித்து சைவ சமய அறநிலையத்துறை மற்றும் வைணவ சமய அறநிலையத்துறை என்று உருவாக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருப்பது வன்மையாக கண்டிப்பதாகவும், திருமாவளவன் சொல்வது போல் அவ்வாறு பிரித்தால் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களை விட ஹிந்துக்கள் சிறுபான்மை இனராக ஆகும்பொழுது தற்போது உள்ள இட ஒதுக்கீட்டு முறையை விட்டுக் கொடுக்க திருமாவளவன் சம்மதிப்பாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

43 minutes ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

1 hour ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

2 hours ago

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…

3 hours ago

ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…

4 hours ago

அந்த மாதிரி ஐடியா இல்லங்க.. ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்தியா படைத்த மொத்த சாதனைகள்!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…

4 hours ago

This website uses cookies.