Whats App குரூப்பில் டெண்டர் ஒதுக்கீடு.. கோவை மாநகராட்சியில் அதிர்ச்சி : Entry கொடுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2024, 8:01 pm

Whats App குரூப்பில் டெண்டர் ஒதுக்கீடு.. கோவை மாநகராட்சியில் அதிர்ச்சி : Entry கொடுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை!

கோவை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கிட்டில் விதிமுறை மீறப்பட்டிருப்பதாக புகார் வந்தது. கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ‘சிசிஎம்சி டெண்டர் மெம்பர்ஸ்’ என்ற பெயரில் புதிய வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் மூலமாக 192 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த குழுவில் டெண்டர் அறிவிப்புகள், விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. யார் யாருக்கு என்ன வேலைக்கான டெண்டர் வேணும், யார் எந்த வேலை எடுத்திருக்கிறார்கள். யார் அட்வான்ஸ் வேலை செய்தார்கள் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

வார்டு வாரியாக ஒப்பந்ததாரர்கள் சிலர், தங்களுக்கு ரோடு வேலை தேவை, குடிநீர் பராமரிப்பு பணி தேவை என குழுவில் பதிவு செய்திருந்தார்கள். மாநகராட்சிக்கு டெண்டர் விடும் பணி, பொறுப்பு மாநகராட்சி நிர்வாகம் சார்ந்தது.

எப்படி இதை வாட்ஸ் குழு ஆரம்பித்து ‘சிண்டிகேட்’ போட்டு முடிவு செய்யலாம், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என மாநகராட்சி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர்.

சிலர் ஒப்பந்த பணிகளுக்கு கமிஷன் வாங்கி ஒதுக்கீடு செய்து தந்து வந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் அரசியல் கட்சியின் ஆசி பெற்றவர்கள் செயல்பட்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர் மூலமாக பல்வேறு வார்டு, மண்டல அளவில் ஒப்பந்த பணிகள் குறிப்பிட்ட சிலருக்கு பிரித்து வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த ‘செட்டிங்’ டெண்டர் விவகாரம் மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இதில் முறைகேடாக ஒப்பந்தம் எடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், CCCA ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் செயலாளர் K.Chandraprakash, சங்க வாட்ஸ் அப் குழுவில் வெளியிட்ட ஆடியோ பதிவில், மாநகராட்சியில் டெண்டர் தொடர்பாக வாட்ஸ் அப் குழு அமைத்து அதில் டெண்டர் ஒதுக்கீடு பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் விசாரணை நடக்கிறது.

இதில் வாட்ஸ் அப் குழுவில் இருந்தவர்கள் உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜராகி கடிதம் கொடுத்து விடுங்கள், எங்களுக்கும் டெண்டருக்கும். சம்பந்தம்மில்லை என சொல்லி விடுங்கள். இல்லாவிட்டால் குரூப்பில் இருந்த சங்க உறுப்பினர்கள் மீது சார்ஜ் சீட் போட வாய்ப்புள்ளது.

இந்த விவகாரம் தீவிரமாக போய் கொண்டிருக்கிறது. எனவே முன் கூட்டியே ஆஜராகி விளக்கம் தருவது நல்லது. இல்லாவிட்டால் எப்ஐஆர் போட்டு விட்டால் சிக்கலாகி விடும். இதை அலட்சியமாக விட்டு விடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!