Categories: தமிழகம்

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி.. ஆனா அந்த 6 இடங்கள் மட்டும் : க்ரீன் சிக்னல் காட்டிய உயர்நீதிமன்றம்!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடைபெற இருந்த அணிவகுப்பிற்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்தது.

இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதிக்குமாறு, அதற்கான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால், பல இடங்களில் அனுமதி வழங்கவில்லை எனக் கூறி காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், “கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மற்ற 47 இடங்களில் அனுமதி வழங்கவில்லை. அனுமதியளித்த உத்தரவை செயல்படுத்தாமல் உளவுத்துறை அறிக்கையை காட்டி தமிழக அரசு தப்பிக்க பார்க்கிறது” என்று வாதிட்டார்.

இதையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ந்தேதி கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு வேறு மாதிரியான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டே 3 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார்.

மேலும் 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அதற்கு அனுமதி வழங்க காவல்துறை தயாராக உள்ளது என்றும், ஆனால் எஞ்சியுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் தற்போது பல இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளது என்று தெரிவித்த அவர், ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் மாநிலத்தின் பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உளவுத் துறை அறிக்கையை பார்த்த பிறகு 47 இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாங்குநேரி ஆகிய இடங்களைத் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்களையும் சேர்த்து 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதே போல 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்எஸ்எஸ் காத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…

தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…

1 hour ago

பெண்களை ரொம்ப கேவலமாக பேசக்கூடியவர்கள் அந்த ரெண்டு தலைவர்கள்தான் : ஜோதிமணி விமர்சனம்!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…

2 hours ago

திமுகவில் பதவி வகிக்க தகுதியில்லாத பொன்முடிக்கு அமைச்சர் பதவி எதுக்கு? வானதி சீனிவாசன் கொந்தளிப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…

3 hours ago

பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…

3 hours ago

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

4 hours ago

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

4 hours ago

This website uses cookies.