நினைவுக்கு திரும்பிய சிறுவன்… சிகிச்சைக்காக ரூ.2 கோடி கொடுத்த புஷ்பா படக்குழு!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2024, 4:56 pm

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா படம் பார்க்க வந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டு ரேவதி என்ற பெண் இறந்த நிலையில் அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோமா நிலையில் இருந்த சிறுவன் ஸ்ரீதேஜ் உடல் நிலையில் சிகிச்சையில் முன்னேற்றம் இருப்பதாகவும் உடலில் அசைவுகள் இருப்பதாகவும் உணவு தொடர்ந்து பைப் மூலம் செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் மீது சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் உரிமையாளர் உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால் ஜாமின் வழங்கியதால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இதே வழக்கில் நேற்று அல்லு அர்ஜுனிடம் மீண்டும் விசாரனைக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் போலீசார் வரவழைத்து மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்தனர்.

இந்நிலையில் இன்று தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சி கழக தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு, புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், மைத்திரி மூவிஸ் நிர்வாகத்தினர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள ஸ்ரீதேஜைப் பார்த்தனர்.

இதையும் படியுங்க: வீடியோவை பார்த்து கண்ணீர் விட்ட அல்லு அர்ஜுன்…போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது..!

டாக்டர்களிடம் சந்தித்துப் பேசி ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து விவரங்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட ரேவதி குடும்பத்திற்கு ₹2 கோடிக்கான காசோலையை தெலங்கானா திரைப்பட வளர்ச்சி கழக தலைவர் தில்ராஜு மூலம் வழங்கினர்.

இதில் அல்லு அர்ஜுன் தரப்பில் ₹ 1 கோடியும் புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவீஸ் சார்பில் ரவி, நவீன் இணைந்து ₹ 50 லட்சமும், இயக்குனர் சுகுமார் வெளிநாட்டில் உள்ளதால் அவரது தரப்பில் அவரது அண்ணன் அசோக் ₹.50 லட்சம் என மொத்தம் ₹ 2 கோடி வழங்கினர். ஏற்கனவே தெலங்கானா மாநிலம் சினாமாகிராப்பி மற்றும் சாலை, கட்டிடத்துறை கோமட்டி ரெட்டி வெங்கட் ரெட்டி தனது சொந்த நிதியில் இருந்து ஸ்ரீதேஜ் சிகிச்சைக்காக ₹ 25 லட்சம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 65

    0

    0

    Leave a Reply