அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் : கழகத்துண்டு அணிவித்து வரவேற்பு…!

Author: kavin kumar
30 January 2022, 9:00 pm

தருமபுரி : தருமபுரி அதிமுக அலுவலகத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

தருமபுரி அதிமுக அலுவலகத்தில் பேகாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட குட்டப்பட்டி, பட்டகப்பட்டி கிராமங்களை சேர்ந்த திமுக கிளை பிரதிநிதி பழனி மற்றும் தேமுதிகவை சேர்ந்த தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இன்று முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமையில் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் 50 க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் தங்களை இணைந்து கொண்டனர்.

அதிமுகவில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் அதிமுக துண்டினை அணிவித்து கழகத்தில் இணைத்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூக்கடை ரவி, தருமபுரி கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…
  • Close menu