அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு… காஞ்சியில் பதற்றம் ; விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்..!!

Author: Babu Lakshmanan
12 August 2022, 6:49 pm

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டை அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மர்ம நபர்கள் காவிதுண்டு அணிவிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமது பேட்டை மத்திய மின்வாரிய அலுவலகம் முன்பு அண்ணல் அம்பேத்கரின் ஆளுயர திருவுருவ சிலை உள்ளது. அம்பேத்கரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் தினத்தில் அம்பேத்கர் சிலைக்கு சமூக அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் மின் வாரிய அலுவலகம் வந்த மின்வாரிய ஊழியர்கள் அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்க பட்டதை கண்டு அதிச்சியுற்றனர். அண்ணல் அம்பேத்காரின் முழு திரு உருவ சிலைக்கு காவித்துண்டு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவியதையடுத்து, மின்வாரிய அலுவலகம் முன்பு சமூக அலுவலர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று கூடினர்.

அங்கு அதிக மக்கள் கூடுவதை கண்ட காவல்துறையினர் அம்பேத்கர் சிலைக்கு அனுபவிக்கப்பட்டு இருந்த காவித்துண்டை உடனடியாக யாருக்கும் தெரியாமல் அகற்றினர்.அம்பேத்கர் சிலை காவிதுண்டு இல்லாததைக் கண்ட விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் காவித்துண்டை எடுத்தது யார் என கூறி காவல்துறையினரை முற்றுகையிட்டு கோசம் எழுப்பினர.

மேலும் காவித்துண்டை அணிவித்த சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சமூகம் அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் காஞ்சிபுரம் வேலூர் சாலையில் மின்வாரிய அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் காஞ்சிபுரம் பெங்களூர் சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காவித் துண்டு அணிவித்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து சாலை மறியலை விடுதலை சிறுத்தைகள் கைவிட்டனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் நேரில் வந்து விசாரணை செய்தார். சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் விநாயகம் ,உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 20 மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!