காலையில் ஆம்புலன்ஸ் சேவை…இரவில் கஞ்சா சப்ளை : சமூக விருதுகள் பெற்ற இரட்டைச் சகோதரர்கள் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan28 ஏப்ரல் 2022, 5:46 மணி
ராமநாதபுரம் : கீழக்கரை அருகே சமூக விருதுகளை பெற்ற இரட்டையர்களை கஞ்சா கடத்த விற்பனையில் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கீழக்கரை உதவி ஆய்வாளர் ஆறுமுகத்தரசன் தலைமையில் காஞ்சிரங்கடி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது காஞ்சிரங்குடி பேருந்து நிலையம் அருகே போலீசாரை கண்ட 4 பேர் கொண்ட கும்பல் ஓட முயற்சித்த போது, விரட்டி பிடித்த போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.
அதில் 2 கிலோ 200 கிராம் எடையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கீழக்கரையில் சில்லறை வியாபாரம் செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்து ஏர்வாடி தண்ணீர் பந்தல் முகம்மது. (வயது 19), கீழக்கரையை சேர்நத்து முகமது நசிருதின், அகமது அசாருதீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்ப்பட்ட முகமது நசிருதின், அகமது அசாருதீன் ஆகியோர் இரட்டை சகோதாரர்கள் என்பதும் , ஆம்புலன்ஸ் சேவை செய்து வருவதும் தெரியவந்தது. இவர்களுக்கு சமூக அமைப்புகள் சார்பில் பல்வேறு சமூக சேவை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0