அரசு பேருந்தில் திடீரென கிளம்பிய புகை… அலறியடித்து ஓடிய பயணிகள்… பழுதுபார்ப்பு உதிரி பாகங்கள் இல்லாததால் ஓட்டுநர் அவதி..!!!

Author: Babu Lakshmanan
1 May 2024, 6:33 pm

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தில் என்ஜினில் புகை வந்ததால் பேருந்தில் இருந்து இறங்கி பயணிகள் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம் மேல்பட்டி வழியாக குடியாத்தம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது 20க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தனர். அப்போது, பேருந்து என்ஜினில் இருந்து திடீரென புகை வந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்தை விட்டு அலறியடித்து இறங்கி ஓடியுள்ளனர்.

மேலும் படிக்க: நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை… அத்துமீறினால் அபராதம், சிறை தண்டனை என அறிவிப்பு!!!

இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநர் செய்வதறியாமல் திகைத்து இன்ஜினில் புகை வருவதை சரி செய்ய முயன்ற போது, பேருந்தில் உதிரிபாகங்கள் (ஸ்பேர் பார்ட்ஸ்) இல்லாததால் பேருந்து நிலையத்திலிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரிடம் கேட்டு பெற்று பின்னர் அங்கிருந்த சக ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இன்ஜினில் வந்த புகையை அனைத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் ஆம்பூரில் இருந்து குடியாத்தத்திற்கு 11.50க்கு செல்லக்கூடிய அரசு பேருந்து சுமார் 2:30 மணி நேரமாக பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டதால், பச்சகுப்பம், அழிஞ்சிகுப்பம், மேல்பட்டி, வளத்தூர், செம்பேடு, குடியாத்தம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும், பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர்.

மேலும் அரசு பேருந்துகளில் ஏற்படும் பழுதுகளை சரி பார்க்க கூட உதிரி பாகங்கள் இல்லாத அவல நிலை நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 1257

    0

    0