சென்னை வந்தார் அமித்ஷா… ‘திடீர்’ பவர் கட் : பாஜகவினர் ஒன்றுதிரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2023, 10:06 pm

சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னைக்கு வந்து இருக்கிறார்.

வேலூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் நாளை கலந்துகொள்ள உள்ளார். சென்னை விமான நிலையத்தில் அமித்ஷாவை எல் முருகன், ஹெச் ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது சென்னை விமான நிலைய பகுதியில் திரண்டிருந்த பாஜகவினரை பார்த்து அமித்ஷா கையசைத்தார். அந்த சமயத்தில் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!