எண்ணூரில் எண்ணெய் கசிவை தொடர்ந்து அமோனியம் வாயு கசிவு.. மயக்கமடைந்த மக்கள் : காவல்துறை கொடுத்த விளக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan27 December 2023, 9:26 am
எண்ணூரில் எண்ணெய் கசிவை தொடர்ந்து அமோனியம் வாயு கசிவு.. மயக்கமடைந்த மக்கள் : காவல்துறை கொடுத்த விளக்கம்!!
சென்னை எண்ணூரில் உள்ள கொரமண்டல் உரத் தொழிற்சாலையில் அம்மோனிய கசிவால் அருகில் உள்ள பெரிய குப்பம் , சின்ன குப்பம் உள்ள பகுதிகளில் மூச்சு திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமம் அடைந்த நிலையில், சுமார் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தொழிற்சாலை நிர்வாகம் அமோனியா கசிவை சரி செய்து விட்டதாகவும் இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவுறுத்திய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எண்ணூர் திருவொற்றியூர் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காவல்துறை அதிகாரி உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்ல பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட தனியார் அரசு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதில் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கசிவானது சுமார் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டதாக காவல்துறை சார்பாக கூறப்படுகிறது.