11 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்த கொடூரம் : ஷாக்கிங் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan25 July 2024, 7:58 pm
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு செய்யாறு அருகே உள்ள கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது சுமங்கலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார் 26 அஜித் 25 நவீன் குமார் மற்றும் 17 வயது சிறார் இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து அவ்வழியாக சென்ற 11 வயது சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக பீர் குடிக்க வைத்து செல்போன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்த கொடூரம்!#Trending | #Tiruvannamalai | #Alcohol | #Boy | #ViralVideos | #UpdateNews360 pic.twitter.com/QegQcEnNb1
— UpdateNews360Tamil (@updatenewstamil) July 25, 2024
இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சிறுவனின் தந்தை செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 11 வயது சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக பீர் கொடுத்து வீடியோ எடுத்து வெளியிட்ட 17 வயது சிறார் உள்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.