சிவகங்கை : சிவகங்கை அருகே 108 ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளான நிலையில் ஆம்புலன்ஸில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இளையாங்குடி அருகே நெஞ்சாத்தூரை சேர்ந்தவர் குமரேசன் மனைவி நிவேதா. கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில், நிவேதா சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உடன் அவரது தாய் விஜயலட்சுமி மற்றும் உறவுக்கார பெண் திருச்செல்வி ஆகியோர்கள் சென்றனர்.
ஆம்புலன்ஸ் ஊத்திக்குளம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி நிவேதா மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவர் மலையரசன், தொழில்நுட்ப அலுவலர் சத்யா மற்றும் உறவுக்கார பெண் திருச்செல்வி ஆகியோர் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.