அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சத்யன். இவர் உடையார்பாளையத்தில் மரப்பட்டறை தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் தனது மனைவி இரு குழந்தைகளுடன் மதுரைக்கு கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு திருச்சி சஞ்சீவி நகரில் உள்ள ஹோட்டலில் தனது குடும்பத்துடன் உணவருந்தினார்.
உணவருந்திய பிறகு தனது காரில் ஏறியபோது, முகமூடி அணிந்த ஒரு நபர் காரில் ஏறி சத்யனின் குழந்தை கழுத்தில் கைத்துப்பாக்கி போன்று ஒன்றை வைத்து கொண்டு சத்யனிடம் உடனடியாக காரை எடு இல்லையென்றால் சுட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனைக் கண்டு பயந்து போன சத்தியன் மனைவி குரல் எழுப்பவே அங்கிருந்த பொதுமக்கள் கார் அருகே விரைந்து வந்தனர்.
இதை கண்ட அந்த முகமூடி நபர் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சத்தியன் அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகமூடி நபர் அந்த பகுதிக்கு ஆட்டோவில் வந்து இறங்கியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதனடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ஆட்டோ அரியமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவரது ஆட்டோ என்பது தெரிய வந்துள்ளது.
அதனடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் ஸ்டாலினிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சினிமா பாணியில் தொழிலதிபரை குடும்பத்துடன் கடத்த முயன்ற நபரால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உள்ளவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர்…
அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியடைந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் அடுத்த படமான குட் பேட்…
அதிமுகவை யாராலும் உடைக்கவும், முடக்கவும் முடியாது என்று, செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். சென்னை: இன்றைய…
ஆர்ய - சந்தானம் கலக்கல் காம்போவில் வெளியான பாஸ் (எ) பாஸ்கரன் படம் மார்ச் 21ம் தேதி ரீரிலீஸ் செய்யப்பட…
மம்மூட்டி நடித்திருக்கும் பசூக்கா திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தாண்டி தனது அடுத்தடுத்த படங்களையும்…
திருவள்ளூர் அடுத்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார் என்கிற ஷாம் (31). இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவருக்கும் திருவள்ளூர்…
This website uses cookies.