குழந்தையுடன் பாட்டியை காப்பாற்றிய யானை: களிமண் சிலையில் சம்பவத்தை தத்ரூபமாக வடிவமைத்த கலைஞர்..!

Author: Vignesh
3 ஆகஸ்ட் 2024, 3:30 மணி
Quick Share

கோவை: வயநாடு நிலச்சரிவில் மீண்டு வந்த பாட்டிக்கும் பேத்திக்கும் காவலாய் நின்ற காட்டுயானை – களிமண் சிலையில் சம்பவத்தை தத்ரூபமாக வடிவமைத்த கலைஞர்.

கேரள மாநிலம் வயநாடில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு அனைத்து மக்களின் மனதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 300க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் உயிரிழந்த நிலையில் அந்த நிலசரிவில் இருந்து மீண்டு வந்த ஒரு மூதாட்டி மற்றும் ஒரு சிறுமி இருவரும் வனப்பகுதியில் தஞ்சமடைந்தனர்.

அப்போது அவ்வனப்பகுதியில் வந்த காட்டு யானை தங்கள் அருகில் வந்ததாகவும் அப்போது நாங்களே பெரிய துயர்த்திலிருந்து தப்பி வந்திருக்கிறோம் எங்களை ஒன்றும் செய்யாதே என்று யானையிடம் கூறியதாகவும், அந்த காட்டுயானை இருவரையும் ஒன்றும் செய்யாமல் தங்களுக்கு காவலாக இருந்ததாகவும் மறுநாள் மீட்பு துறையினர் வரும்வரை தங்கள் அருகிலேயே பாதுகாப்பாய் நின்று பின்னர் அங்கிருந்து சென்றதாக மூதாட்டி தெரிவித்திருந்தார். மூதாட்டி கூறியதை கேட்ட பலரது மனதும் உருக்கமடைந்தது.இந்நிலையில் அந்த சம்பவத்தை கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா களிமண்ணால் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 228

    0

    0