மக்காச்சோளம் ஏற்றி வந்த லாரியை வாசம்பிடித்த யானை : திம்பம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் ஷாக்..(வீடியோ)!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2023, 12:41 pm

தமிழக மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து தமிழக எல்லைப் பகுதியில் காரபள்ளத்தில் வனத்துறையினரின் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகளை காப்பதற்காக, நீதிமன்ற உத்தரவுப்படி, இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக அன்றாடம் காலை 6 மணி முதல் போக்குவரத்து துவங்கும். காலை ஆறு மணியில் இருந்து அனைத்து வாகனங்களுக்கும் இந்த பாதையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் தான் நேற்று இரவு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பல்லடம் செல்வதற்காக மக்காச்சோளம் ஏற்றி வந்த ஒரு லாரி, சோதனை சாவடி அருகே பழுதாகி நின்றது.

இதனால் மக்காச்சோளத்தை உண்பதற்காக காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று, அந்த லாரியை நெருங்கி நின்றது.

ஒற்றை அணி நின்றதால், அச்சத்தின் காரணமாக, எந்த வாகனமும் செல்ல முடியாமல் அனைத்து வாகனங்களும் வரிசையாக நிறுத்தப்பட்டது.

காலை 7.00 மணியிலிருந்து இரு மாநிலங்களில் இருந்து வந்த கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டது.

சுமார் 40 நிமிடங்களாக காட்டு யானை நடுரோட்டில் நின்று மக்காச்சோளத்தை உண்டு, அங்கும் இங்கும் நடமாடுவதால் அனைவரும் பீதி அடைந்து, நகர செல்ல முடியாமல் காத்திருக்கின்றனர்.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் பேருந்தில் வந்தவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி, அதனை புகைப்படம் எடுத்தும் வருகின்றனர்.

https://vimeo.com/812698966

அனைவரையும் வனத்துறையினர் விரட்டி வருகின்றனர். ஒற்றையானை என்பதால் தாக்கி விடக்கூடும் என்ற பயத்தால் வனத்துறையினர் தற்பொழுது அதனை துரத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 431

    0

    0