குட்டியை ஈன்ற யானை திடீர் உயிரிழப்பு.. தாயை இழந்து சாலையோரம் சுற்றித் திரியும் குட்டியானை!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2024, 10:05 pm

குட்டியை ஈன்ற யானை திடீர் உயிரிழப்பு.. தாயை இழந்து சாலையோரம் சுற்றித் திரியும் குட்டியானை!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி வனப்பகுதியில் வயது முதிர்ந்த சுமார் 40 வயது மதிக்க தக்க பெண் யானை ஒன்று குட்டியுடன் வனப்பகுதியில் மயங்கி விழுந்தது.

மயங்கி விழுந்த தாய் யானையுடன் வந்த குட்டி தவித்தபடி அங்கும் இங்கும் சுற்றிக் திறிந்து பண்ணாரி – பவானி சாகர் ரோட்டில் நடமாடியதை கண்ட பொதுமக்கள் உடனடியாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சாலையில் இருந்து சில மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்குள் மயங்கி கிடந்த பெண் யானை கண்டறிந்தனர்.

இதனைக் கண்ட வனத்துறையினர் வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உடல் நலம் குன்றிய யானைக்கு வன கால்நடை மருத்துவர் கொண்ட சிகிச்சை அடிச்சுனர் இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் யானை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து அதன் குட்டியை மற்றொரு யானை கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்து விட்டனர்.

அந்த யானை கூட்டத்துடன் சேர்ந்து சென்ற குட்டியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் அந்த குட்டி யானை மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி மீண்டும் சாலையோரம் நடமாடி வந்தது அதனை மீட்ட வனத்துறையினர் ஆசனூர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர் அருகே உள்ள அரேப்பாளையம் பஸ் நிறுத்தப் அருகே அந்த குட்டி யானை மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி சுற்றி வந்தது.

அநத குட்டி யானை அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அங்கு வந்த வனத்துறையினர் அந்த குட்டியை மீட்டு தற்போது ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட முகாமில் பால் மற்றும் மருத்துவ சிகிச்சையுடன் தற்போது அந்த குட்டி யானையை பாதுகாத்து வருகின்றனர் .

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 288

    0

    0