பிரபல தீம் பார்க்கில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. ஊழியர் கைது!

Author: Hariharasudhan
21 January 2025, 2:29 pm

சென்னையில் உள்ள பிரபல தீம் பார்க்கில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை: சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான (விஜிபி) தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. இங்கு, விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுமாம். இந்த நிலையில், கடந்த ஜனவரி 17ஆம் தேதி, சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய 19 மற்றும் 16 வயதுடைய இரண்டு மகள்களுடன் இங்கு வந்துள்ளார்.

அப்போது, அந்த தீம் பார்க்கில் உள்ள நீர் சறுக்கு பகுதியில், மூத்த மகளும், இளைய மகளும் சறுக்கிய பொழுது, அங்கு பணியில் இருந்து ஊழியர் ஒருவர் மகள்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே, உடனடியாக இது குறித்து தீம் பார்க் நிர்வாகத்திடம் தாய் புகார் அளித்துள்ளார்.

Sexual abuse in VGP Theme Park Chennai

ஆனால், அதற்கு தீம் பார்க் நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பெண்களின் தாய், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஊழியர் சுரேந்திரன் என்பவரை கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத்தானே செய்யும்..’ அப்பாவுக்கு அண்ணாமலை கண்டனம்!

மேலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்ததை சுரேந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து, சுரேந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக தீம் பார்க் நிர்வாகத்திடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Sundar C's Sangamithra movie revival பாதாளத்தில் உள்ள தனது கனவு படத்தை தோண்ட முடிவு…சுந்தர் சி போடும் பக்கா பிளான்…!
  • Leave a Reply