அதிகாலை வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி கொலை… விசாரணையில் பகீர் : வெளியான சிசிடிவி காட்சி.. திருப்பூரில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 9:27 am

திருப்பூரில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு 5 சவரன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் எஸ்.வி காலனி மெயின் ரோடு, டி.எஸ்.ஆர் லே அவுட் பகுதியை சேர்ந்த முத்துசாமி. அவரது மனைவி சந்திராமணியுடன் (வயது 67) தனியாக வீட்டில் வசித்து வரும் நிலையில், இவர்களது மகன் தாயின் வீட்டருகே கெமிக்கல் கம்பனி நடத்தி கொண்டு, கே.பி.என்.காலனியில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சந்திரமணி காலை 4.50 மணிக்கு எழுந்து வீட்டின் முன் பக்க கேட்டை திறந்து வைத்துவிட்டு, கணவனுக்கு உணவு தயார் செய்து கொண்டிருந்தவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது கணவர் முத்துசாமி சென்று பார்த்த போது, கழுத்தறுத்து இரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தவர் பொது மக்கள் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்க்கு வந்த வடக்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி காட்சிகளை பார்த்த போது. 55 வயது மதிக்கதக்க மர்ம நபர் வீட்டிற்க்குள் சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியேறிய காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து மூதாட்டியின் கழுத்தை அறுத்து அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை பரித்து சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். அதிகாலை மூதாட்டியை கழுத்தறுத்து 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 819

    0

    0