நாய் கடிக்கு ஊசி போட வந்த முதியவர் அலைக்கழிப்பு.. மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்..!

Author: Vignesh
22 August 2024, 2:43 pm

மதுரை தனக்கன்குளத்தில்  நாய்கடிக்கு 2-வது தவணை ஊசி போட வந்த முதியவரை ஊசி வாங்க அனுப்பி வைத்த தனக்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையம். – மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் வீடியோ வைரல்.

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் குருவம்மாள் இவரை அப்பகுதியில் உள்ள தெரு நாய் ஒன்று கடித நிலையில், தனக்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் தவணை ஊசி செலுத்தி இருந்தார். இந்த நிலையில், இன்று காலை இரண்டாவது தவணை ஊசி போட சென்ற நிலையில் அங்கு பணியில் இருந்த மருத்துவப் பணியாளர்கள் ஊசி போட சிரஞ்ச் இல்லை. எனவே, அருகிலுள்ள தனியார் மெடிக்கலில் ஊசி போடுவதற்கு சிரஞ்ச் வாங்கி வாருங்கள் எனக் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மிக சோர்வுடன் இருந்த முதியவர் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனியார் மெடிக்கல் சிரஞ்சு வாங்கி வந்துள்ளார் இதை அறிந்த அப்போதியைச் சேர்ந்த இளைஞர் தனக்கன்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய இந்த மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவரிடம் மருத்துவமனைக்கு ஏழை எளிய மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.

மருத்துவ உபகரணங்கள் இல்லைையினால் தலைமை மருத்துவமனைக்கு அல்லது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து போதுமான அளவு மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் இது அரசு மருத்துவமனை தானே என்றும் கேள்வி எழுப்பினர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi movie bookings அஜித்தின் விடாமுயற்சி கொண்டாட ரெடியா…படத்தின் புக்கிங் ஓபன்..குஷியில் ரசிகர்கள்..!
  • Views: - 266

    0

    0