கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த முதியவர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2024, 11:36 am

கோவையில் கடந்த 2021-ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தோனி (55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று அந்தோனிக்கு 22 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 15,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் காவலர் கனிமொழி ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ