மின்சார ரயில் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற முதியவர் : சாதுர்யமாக காப்பாற்றிய ரயில்வே காவலர்கள்.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2022, 3:59 pm

ராணிப்பேட்டை : அரக்கோணத்தில் நள்ளிரவில் ரயில் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட முதியவரை சாதுர்யமாக காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவலர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் நடை மேடை 7ல் இருந்த மின்சார ரயில் மீது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோ (வயது 69) என்ற முதியவர் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் உடனடியாக நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு ரயில்வே ஊழியர்களை வரவழைத்து சாதுர்யமாக செயல்பட்டு காவல்துறை மற்றும் ரயில்வே ஊழியர்கள் முதியோரை பத்திரமாக மீட்டனர்.

மேலும் முதியவரை கைது செய்ய காவல்துறையினர் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1199

    0

    0