தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2025, 5:43 pm
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது என கூறியதால் தர்பூசணி விற்பனையாகாததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இதையும் படியுங்க: படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. போதைப்பொருளுடன் வந்த முன்னணி நடிகர்..!!
இந்த நிலையில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டை சேர்ந்த விவசாயி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இன்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் எந்த ரசயாணமும் இல்லை என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.