‘கண்மூடிய ஒரு நொடி’.. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் நடந்த அசம்பாவிதம்..!

Author: Vignesh
26 August 2024, 11:53 am

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், ராஜகுமாரி பகுதியை சேர்ந்தவர் பினில் (35) லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று பெரம்பலூரில் சரக்கு ஏற்றுவதற்காக நாமக்கல்லில் இருந்து தொட்டியம் வழியாக முசிறி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி – நாமக்கல் மெயின் ரோட்டில் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் இருந்த உணவகம், பெட்டி கடைகள் மற்றும் மின்கம்பங்கள் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், 3மின் கம்பங்கள் மற்றும் உணவகம், பெட்டி கடைகள் முன்பகுதி சேதம் அடைந்தது. மின் கம்பத்தில் இருந்த கம்பிகள் அறுந்து விழுந்தது தகவல் அறிந்த மின்வாரிய பணியாளர்கள் விரைந்து வந்து அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தால்
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் காவல்துறையினர் லாரி டிரைவர் பினில் என்பவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படிருந்ததால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!