தமிழ்நாட்டில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையல் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டையை அறிமுகம் செய்தார்.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் 331 ரவுடிகள் சிறையில் அடக்கப்பட்டு உள்ளனர்.
மீதி பேரிடம் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது. அதை மீறினால் 6 மாதம் சிறையில் அடைக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்த சம்பவத்தால் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் கதிகலங்கியுள்ளனர்.
ஆனால் போலீசார் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை எடுத்த 24 மணி நேரம் ஆவதற்கு முன்னரே சென்னை ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் நேற்று இரவு 9 மணியளவில் 20 பேர் கொண்ட கும்பல் கையில் பெட்ரோல் வெடிகுண்டு, கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று தெருவில் நின்று கொண்டிருந்தவர்களை மிரட்டி உள்ளனர்.
பின்னர் அந்த தெருவில் கடைசியில் சித்தர் கோயில் சுற்றி புதர்மண்டிய காலி இடம் உள்ளது. அங்கு பெட்ரோல் வெடிகுண்டு வீசி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். அப்போது இந்த கும்பல் நாங்கள் தான் இங்கு பெரிய ரவுடி என கத்திக் கொண்டே கையில் இருந்த கத்தியால் அந்த தெருவில் நின்று கொண்டு இருந்த நவீன் (வயது 31), ஷபீக் (வயது 22), அபுபக்கர் (வயது 19), ஆகிய மூன்று பேரை தலையில் வெட்டிவிட்டு, தெருவோரம் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, பிளாஸ்டிக் சேர் ஆகியவற்றை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து அச்சமடைந்த பெண்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்தில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே தலையில் வெட்டுக்காயத்துடன் மூவரையும் கிண்டி கத்திபாரா அருகில் உள்ள பாலாஜி மருத்துவமமையில் சிகிச்சைக்காக அனுமத்தித்தனர். இதில் நவீன் மற்றும் அபுபக்கர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஷபீக் மட்டும் மேல் சிகிச்சைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷபீக்கின் மருத்துவ கட்டணத்தை 19,500 ரூபாய் மட்டுமே உறவினர்கள் செலுத்தினர். மருந்து செலவாக ரூ.6,500 செலுத்த கூறியதால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே போலீசார் அவர்களுடன் சமரச பேச்சுவார்தை நடத்தி போராட்டத்தி கலைத்தனர். தப்பியோடிய நபர்கள் யார் என சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் எதற்காக வந்தார்கள் எனவும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிண்டியில் பிரபல ரவுடி ஆதம்பாக்கம் ரவுடி ராபின் என்பவரின் உறவினர் அனில் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி நாகூர் மீரான் என்பவரை ராபின் கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்தார்,
அதற்கு பழிதீர்க்கும் விதமாக அனிலை கிண்டியில் வைத்து கடத்திச் சென்று ராபின் எங்கு என கேட்டு அடித்து விட்டு மீண்டும் வீட்டினருகே வந்து விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து போலீசார் ஆதம்பாக்கத்தை சேர்ந்த சஞ்சய், அனில் உள்ளிட்ட 19 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
சுமாரான வரவேற்பு ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான…
திடீரென வைரல் ஆன பெண்… கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மதுராவாடா சுயம்கிருஷி நகரில் லட்சுமி (வயது 43). இவரது மகள் தீபிகா (வயது 20) டிகிரி…
This website uses cookies.