பலமுறை சிறைக்குச் சென்றவர் விஜய்.. வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்த திமுக அமைச்சர்!
Author: Hariharasudhan7 January 2025, 2:30 pm
மக்களுக்கு பிரச்னை என்று சொன்னால், களத்தில் இறங்கி பணியாற்றக் கூடிய எங்கள் விஜய் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக மாணவர் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “அன்புச் சகோதரர் விஜய். விஜய், எங்கள் விஜய். மக்களுக்கு பிரச்னை என்று சொன்னால், களத்தில் இறங்கி பணியாற்றக் கூடிய எங்கள் விஜய். எதிர்கட்சியாக இருந்தபோது, பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என வரும். அப்போது, அன்றைக்கு இருந்த காவல்துறை, ஆட்சியாளர்கள் அடக்குமுறையோடு பலமுறை சிறைக்குச் சென்ற எங்கள் விஜய்.

இப்போது பெய்த மழை என்று சொன்னாலும், உடனடியாக களத்தில் இறங்கி, மக்களுக்குத் தேவையானதை, உடனடியாக தன்னால் முடிந்தவரை செய்து வரும் எங்கள் விஜய். அண்ணாதுரை கூறியது போன்றே, மக்களுடன் நில், மக்களுக்கு என்ன தேவையோ அதனை அங்கிருந்து செய் என்றார்.
இதையும் படிங்க: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு.. விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி : திணறிய மதுரை!
அதேபோல், மக்கள் கேட்பதை, உடனடியாக செவிசாய்த்து அதனை நிவர்த்தி செய்பவர்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அல்ல, மாறாக திமுக மாணவர் அணி நிர்வாகி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.