அதிமுகவுக்கு ஓட்டு போடுறது வேஸ்டா? நாங்க ஓட்டுபோட்டுதான் அன்புமணி MP ஆனாரு: இபிஎஸ் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 9:52 pm

அதிமுகவுக்கு ஓட்டு போடுறது வேஸ்டா? நாங்க ஓட்டுபோட்டுதான் அன்புமணி MP ஆனாரு: இபிஎஸ் விமர்சனம்!

தர்மபுரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: எங்களின் பிரதமர் வேட்பாளர் யார் எனக் கேட்கிறார்கள். ஆட்சி அதிகாரம் எங்களுக்கு தேவை இல்லை. மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அவர்களின் குரலாய் அதிமுக எம்.பியின் குரல் பார்லிமென்டில் ஒலிக்க வேண்டும்.

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த போது 2வது இடம் பிடித்த பா.ம.க., இப்போது பா.ஜ.க கூட்டணியில் 5வது இடத்தில் உள்ளது. பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கும் அளவிற்கு பா.ம.க.,வின் நிலை சென்றுவிட்டது.

அதிமுக.,வுக்கு ஓட்டு போடுவது வேஸ்ட் என்கிறார் அன்புமணி. அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு தான் எம்.பி ஆக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க: தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல், ஏகனாபுரம்! திமுக அரசுக்கு புதிய தலைவலி!!

சுயமாக, சுதந்திரமாக பேச வேண்டும் என்றால் தனியாக இருப்பது தான் சிறந்தது. நீட் தேர்வை பா.ஜ.க தான் அமல்படுத்தியது. அவர்களுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது.அதிமுக இருண்ட ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். திமுக தான் இருண்ட ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ