அரசியல்ல இதெல்லாம் சகஜம்.. ஒன்றாகிய ராமதாஸ் – அன்புமணி.. அப்போ முகுந்தன்?

Author: Hariharasudhan
29 December 2024, 4:30 pm

பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம் தான் எனக் கூறி தந்தை – மகன் மோதலுக்கு பதிலளித்துள்ளார், அன்புமணி ராமதாஸ்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிப் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் இளைஞர் அணித் தலைவராக முகுந்தன் என்பவரை அறிவித்தார்.

இவ்வாறு, தனது மகள்வழிப் பேரனை அறிவித்ததால் ஆவேசமடைந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அனுபவசாலிகளுக்கு பதவி கொடுங்கள் எனக் கூறியது மட்டுமல்லாமல், தன்னுடைய பனையூர் அலுவலகம் வந்து பாருங்கள் எனத் தொண்டர்களிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

இதனையடுத்து, பாமக எம்எல்ஏ ஜி.கே மணி தலைமையிலான குழுவினர், இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதன்படி, இன்று முக்கிய நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக திண்டிவனம் அடுத்த, தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தனர். தொடர்ந்து அன்புமணியும் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

Anbumani Vs Ramadoss

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, “இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸிடம் கட்சியின் வளர்ச்சி பற்றியும், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும், சித்திரை முழு நிலவு மாநாடு பற்றியும், போராட்டங்கள் பற்றியும், விவசாய மாநாடு பற்றியும், அடுத்த கட்டமாக என்னென்ன போராட்டங்கள் எந்தெந்தப் பகுதியில் செய்யலாம் எனவும் குழுவாக விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ’மணல் கடத்தலுக்கு துணைபோகும் உயரதிகாரிகள்’.. சிவகிரி காவலரின் திடீர் முடிவு.. தென்காசி போலீசாரின் பரபரப்பு அறிக்கை!

வரும் ஆண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டாக உள்ளது. மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதற்கேற்ப நடவடிக்கைகள் எல்லாம் எப்படி எடுக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது. மேலும், 10.5 சதவீத சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்தும் ராமதாஸ் தலைமையில் விவாதிக்கப்பட்டது.

எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம் தான். உட்கட்சி பிரச்னை குறித்து நீங்கள் பேச வேண்டாம், நாங்கள் பேசிக் கொள்வோம்” எனத் தெரிவித்தார். இருப்பினும், முகுந்தனுக்கு வழங்கப்பட்ட பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன.

  • Rajinikanth New Year wish பாட்ஷா ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 39

    0

    0

    Leave a Reply