அதிமுக, திமுக கதை இனி அவ்வளவுதான்.. 2026ல் பாமக தலைமையில் தான் ஆட்சி ; அடித்துச் சொல்லும் அன்புமணி ராமதாஸ்!!

Author: Babu Lakshmanan
19 November 2022, 5:13 pm

2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பாமக தலைமையில் தான் ஆட்சியமையும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். பின்னர், கட்சியினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்கள் ஊக்கப்படுத்தினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- வடகிழக்கு பருவ மழை உச்சத்தில் இருக்கிறது. தயார் நிலையில் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானதாக இல்லை. காவிரி டெல்டா பகுதி யில் மூழ்கியுள்ள பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இட ஒதுக்கீடு 10% வழங்கியது உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு
ஏமாற்றம் அளிக்கிறது.

பொருளாதாரம் கீழ் உள்ளவர்கள் என்றால் அனைத்து வகுப்பினர்களும் சேர்க்க வேண்டும். தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய போது, புள்ளி விவரங்கள் இல்லை எனக் கூறிய நிலையில், தற்போது எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு 10% வழங்கி உள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சி 35 ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக, திமுக அரசிடம் நல்ல செயல் திட்டங்களை கூறி அழுத்தம் கொடுத்து வருகிறோம். திமுக, அதிமுக இல்லாமல் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.

தமிழகத்தின் மற்ற கட்சிகள் மக்களை இனம், மதம், திராவிடம் என பிரித்து கொண்டு இருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே வளர்ச்சியை வைத்து மக்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம் ஆகியவற்றை முன்னிறுத்தி பாமக செயல்படுகிறது. மக்கள் மற்ற கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்.

ஆளுநருக்கு ஈகோ இருக்க கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆளுநரை முதல்வர் சந்தித்து பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும். ஆன்லைன் ரம்மி போன்றவற்றை தடை செய்ய அனுப்பப்பட்டது குறித்த கோப்புகளில் உடனடியாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படுகிறது. நடிகர் உள்ளிட்ட மனசாட்சி இன்றி நடிப்பவர்கள் அனைவரையும் கண்டிக்கிறோம்.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை திருப்போரூர் பகுதியில் அரசு இடத்தில் 5000 ஏக்கரில் அமைக்கலாம். என்றும் வளர்ச்சி வேண்டும். விவசாயம் சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் விமான நிலையத்தை செயல்படுத்த வேண்டும்.

சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இணைப்பு இல்லாமல் மழை நீர் வடிகால்களை அமைக்கும் அரசு அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் உண்டாகும். அறிவியல் பூர்வமாக திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மேற்கத்திய நாடுகளை மிஞ்சிய அளவில் தமிழகத்தில் போதை பொருட்கள் பழக்கம் உள்ளது . கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் அதிகரித்துள்ளது. போதிய காவலர்கள் பணியில் நியமிக்கப்பட வேண்டும். முதல்வர் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 412

    0

    0