தமிழகம்

அது சாதனை அல்ல, வேதனை; சுட்டிக்காட்டிய அன்புமணி ராமதாஸ்!

ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நலன்களை அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றி, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் வரையிலான 4 மாதங்களில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற 1,279 தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்காக ரூ.372.06 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இதை சாதனையாக தமிழக அரசு காட்டிக் கொண்டாலும் கூட, இது மிகப்பெரிய வேதனை தான். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நலன்களை அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதையே இது காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது.அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற பணியாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்தாயிரம் ஆகும். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வுக்கால பயன்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி ஆகும்.

ஆனால், கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு அளவுக்கு, அதாவது 1,279 தொழிலாளர்களுக்கு மட்டுமே ரூ.372.06 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது யானைப்பசிக்கு சோளப்பொறியைப் போன்றது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க இது எந்த வகையிலும் போதுமானதல்ல.தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்பட்ட பிறகும், ஏறக்குறைய எட்டாயிரத்திற்கும் கூடுதலான ஓய்வூதியர்களுக்கு ரூ.2,600 கோடிக்கும் கூடுதலான தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது.

அவர்களில் பலர் ஓய்வுபெற்று 20 மாதங்களாகிறது. போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றியவர்கள் தங்களுக்கு மொத்தமாகக் கிடைக்கும் ஓய்வுக்கால பயன்களை நம்பித் தான் தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். ஓய்வு பெற்று 20 மாதங்களாகியும் ஓய்வுக்கால பயன்கள் கிடைக்காத நிலையில், அவர்கள் தாங்கள் வாங்கிய கடனுக்கு வீணாக வட்டி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்றுக் கொள்ளுமா?2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு ஓய்வு பெற்றவர்களில் 40%க்கும் கூடுதலானவர்கள் 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களுக்கு ஓய்வூதியம் கூட வழங்கப்படுவதில்லை. ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட்டாலாவது அவர்கள் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியும். ஆனால், ஓய்வுக்கால பயன்களும் கிடைக்காமல், ஓய்வூதியமும் இல்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் துன்பங்களும், துயரங்களும் ஆடம்பரத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதையும் படிங்க: சைலண்டா இருந்தே இயக்குநரை கரெக்ட் செய்த மாமன்னன் பட நடிகை.. விரைவில் திருமணம்!

உழைப்பவர்களின் வியர்வை காயும் முன்பே அவர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழியை ஆண்டுதோறும் மே நாளில் மேற்கொள்காட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை செயலில் காட்ட மறுப்பது நீதியல்ல. சொல்வதை செயலிலும் காட்டுவது தான் ஆட்சியாளர்களுக்கு அழகு.

எனவே, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அவர்களுக்கான ஓய்வூதிய பயன்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஓய்வு பெறும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளில் ஓய்வுக்கால பயன்களை வழங்குவதை அரசு வழக்கமாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

39 minutes ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

59 minutes ago

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

1 hour ago

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

16 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

17 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

17 hours ago

This website uses cookies.