கட்சியின் ஒன்றியச் செயலாளர்களே களத்திற்குச் செல்வதில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.
சேலம்: சேலத்தில், பாமக மக்கள் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், ஒருவரையொருவர் முகம் காட்டியதில்லை எனக் கூறினார்.
இதனையடுத்து, கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இதே மாவட்டத்தில் (சேலம்) தனியாக நின்று இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருந்தும் இரண்டு தொகுதிகளைத்தான் வென்றுள்ளோம். அப்படியென்றால் நாம் வளர்ந்திருக்கிறோமா?
நமக்கு பலம் இருக்கிறது, இளைஞர் சக்தி இருக்கிறது, வழிகாட்ட ராமதாஸ் இருக்கிறார். ஆனால், அன்றைக்கு இருந்த உழைப்பு நம்மிடம் இல்லை. அன்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி, களத்தில் இறங்கி வேலை செய்தோம். இன்று கிராமங்களுக்குப் போவதே கிடையாது.
தமிழ்நாட்டில் யாரைக் கேட்டாலும் பாமக சிறந்த கட்சி எனச் சொல்வார்கள். நல்ல கொள்கை, கோட்பாடு, செயல்திட்டங்கள், தொலைநோக்குப் பார்வை உள்ள கட்சி என்று சொல்வார்கள். ஆனால், இந்தச் செய்திகளை களத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதில்லை. கட்சியின் ஒன்றியச் செயலாளர்களே களத்திற்குச் செல்வதில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு பெரிய வருத்தம் தெரியுமா? சேலம் மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் நான்கு தொகுதிகளில் நாம் எம்எல்ஏவாக இருந்திருக்கிறோம். ஆனால், நமக்கு கிடைத்தது சொற்ப வாக்குகள் தான். நம் வாக்கு, நம் உழைப்பு எங்கே போனது?
நாம் இழந்த வாக்குகளையெல்லாம் மீண்டும் வர வைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. நம்மைப் போல யாராலும் உழைக்க முடியாது, ஆனால் ஏதோ ஒரு தொய்வு நம்மிடம் இருக்கிறது. மனதுக்குள் இருக்கும் வெறியை இன்னும் 10 மாதங்களில் நாம் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: இன்னும் ஒரு போஸ்டிங் போடுங்க.. உத்தரவிட்ட விஜய்.. நாளை முக்கிய அறிவிப்பு?
தனியாகப் போட்டியிட்டால் கூட சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பாமகவுக்கு அதிக எம்எல்ஏக்களை கொடுத்துள்ள மாவட்டம் சேலம். எவ்வளவோ செய்திகளை மக்களிடம் சொல்லலாம்.
என்ன அண்ணாமலை அப்படியே பாக்குற. உன்னையும்தான் சேர்த்துச் சொல்றேன்.. உன் தொகுதியில் வாங்குனியே ஓட்டு, 52 ஆயிரம் வாக்குகள் வாங்கிய தொகுதி அது. இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கின்றன. வெறி வர வேண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு களத்தில் இறங்குங்கள்” எனக் கூறியுள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.