தமிழகம்

‘திமுகவிற்கு நிபந்தனை இல்லா ஆதரவு’.. அன்புமணியின் திடீர் பேச்சு.. திமுகவின் பதில் இதுதான்!

வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அன்புமணி ராமதாஸின் பேச்சுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்த நிலையில், ஜி.கே.மணி மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

விழுப்புரம்: வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆயிரம் நாட்களைக் கடந்துவிட்ட நிலையிலும், திமுக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “திமுக வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளித்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல்
திமுகவிற்கு ஆதரவு அள்ளிப்போம். 15 விழுக்காடு கையெழுத்து போடுங்கள், நிபந்தனை வேண்டாம், சீட்டுக் கீட்டு எதுவும் வேண்டாம்.

அப்படிச் செய்யவில்லை என்றால், வீடு வீடாகச் செல்வோம்; தெருத்தெருவாகச் செல்வோம். ஸ்டாலின் ஒரு வன்னியர் விரோதி என வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வோம். மானம் உள்ள ஒரு வன்னியர் கூட, திமுகவிற்கு வாக்களிக்க மாட்டான். வன்னியர் சமுதாயத்தின் ஓட்டு மட்டும் வேண்டும், ஆனால் இந்த சமுதாயம் முன்னேறக்கூடாது.

கடைசி வரை இந்தச் சமுதாயம் குடிச்சு குடிச்சு நாசமாகவேப் போக வேண்டும். அடிமையாக இருக்க வேண்டுமா? இட ஒதுக்கீடு கொடுக்க மாட்டீர்களா? திமுகவில் எத்தனையோ தியாகங்கள் செய்து கட்சிக்காக சிறைக்குச் சென்றவர் துரைமுருகன். இன்று திமுகவிலேயே மூத்த அமைச்சராக இருக்கிறார் துரைமுருகன்.

திமுகவிற்காக எவ்வளவோ உழைத்த துரைமுருகனுக்கும் இன்னொரு துணை முதல்வர் பதவியாவது கொடுத்திருக்கலாமே? அவர் வன்னியர் சமுதாயத்தில் பிறந்ததால் துணை முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது” என ஆவேசமாகப் பேசினார். இந்தப் போராட்டத்தில் உதயநிதி பேனரும் கிழிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிங்கை ராமச்சந்திரனுக்கு புதிய பதவி… எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

இந்த நிலையில், “பாமகவில் இன்று வரை பாடுபடும் ஜி.கே.மணியிடம் இருந்து தலைவர் பதவியைப் பறித்தது ஏன்? இட ஒதுக்கீட்டிற்கே முட்டுக்கட்டையாக இருக்கும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டு, பாமக தலைவர் அன்புமணி பேசுவாரா? மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று மோடி அரசை கேட்பீர்களா?” என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துள்ள பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, “பாஜக கூட்டணியில் இருந்து நாளையே நாங்கள் வெளியே வருகிறோம். வன்னியர்களுக்கு 15 சதவீத ஒதுக்கீட்டை அரசு நிறைவேற்றுமா? அன்புமணி கூறியதைப் போல திமுகவுக்கு நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்கத் தயார். அப்படிச் செய்தால் வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வன்னியருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றப்படுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

8 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

9 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

9 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

10 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

10 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

11 hours ago

This website uses cookies.