விஜய் டிவி பக்கம் போகவே மாட்டேன்.. தொகுப்பாளினி பாவனாவின் முடிவுக்கு அது தான் காரணமா..?

Author: Rajesh
14 May 2022, 11:30 am

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் பெரும்பாலும் மக்களால் ரசிக்கப்படுவார்கள். அந்த வகையில், அவர்கள் தொகுத்து வழங்குவது சிறப்பாக இருக்கும், தற்போது பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் போன்றவர்கள் எல்லாம் பிரபல தொகுப்பாளர்களாக உள்ளார்கள். அப்படி விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்து தொகுப்பாளர்களில் பாவனாவும் ஒருவர். இவரும், சிவகார்த்திகேயனும் இணைந்து தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி படு சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

அதில் சிவகார்ததிகேயனை பாவனாவை கலாய்ப்பதும், ரம்யா கிருஷ்ணன் சிவகார்த்திகேயனை ஓட்டுவதும் மிகவும் கலகலப்பாக இருக்கும். விஜய் தொலைக்காட்சியை தாண்டி விளையாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பாவனா இப்போது கலர்ஸ் தமிழில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவரிடம் ஒரு ரசிகர் விஜய் டிவி எப்போது வருவீர்கள் என கேட்க அதற்கு அவர், இனி விஜய் பக்கம் வரப்போவதில்லை, அவர்களின் ஸ்டைல் இப்போது மாறியுள்ளது. காமெடியாகவே நிகழ்ச்சியை கொண்டு செல்ல அவர்கள் இப்போது வழக்கமாக வைத்துள்ளார்கள். அது எனது ஸ்டைலுக்கு மாறாக உள்ளது என கூறியுள்ளாராம்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!