சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்து… அலறியடித்து ஓடிய பயணிகள் ; நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
11 August 2023, 9:37 am

சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர மாநில அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை புழல் அருகே ஆந்திரா நெல்லூர் பகுதியில் இருந்து ஆந்திரா அரசு பேருந்து ஒன்று சென்னை மாதவரம் ஆந்திரா பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்பொழுது, திடீரென பேருந்தில் புகை கிளம்பியதால் ஓட்டுநர் பேருந்து புழல் அருகே கேம்ப் பகுதியில் நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் தீ பேருந்து முழுவதும் பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பேருந்தில் இருந்து இறங்கி ஓடி உள்ளார். இதனை தொடர்ந்து, பேருந்து முழுவதும் தீயானது பரவ துவங்கியதால், பேருந்தில் இருந்த 45 பயணிகள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சரியான நேரத்தில் ஓட்டுனர் சுதாரித்துக் கொண்டு பேருந்தை நிறுத்தியதால் எந்த காயமும் இன்றி ஓட்டுநர் உட்பட பயணிகள் உயிர் தப்பினர்.

அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்தும், தீயணைப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயன கலவைகளை அடித்தும் தீயை அணைக்க முற்பட்டனர்.

அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆனது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பதற்றம் நிலவியது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த புழல் போலீசார் பேருந்து தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!