காஞ்சிபுரம் : கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்ய எடுத்து சென்ற 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்த போலீசார் ஆந்திராவை சேர்ந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை பகுதியில் போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் ஆய்வாளர் வசந்தி அவர்கள் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.
அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சாய் குமார் (வயது 22) என்பவரை பிடித்து சோதனை செய்ததில் அவர் பையில் 5 பொட்டலங்களாக 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சாய்குமார் இடம் விசாரணை செய்ததில் SRM கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்காக இந்த கஞ்சா பார்சல் விற்பனை செய்ய எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சாய்குமார் லஞ்ச ஒழிப்பு சட்டம் , போதை மருந்துகள் உளவெறியூட்டம் சட்டம் 1985 கீழ் வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
சாய்குமார் அளித்த தகவலின் பேரில் எஸ்ஆர்எம் கல்லூரியில் விரைவில் சோதனை செய்யப்படும் எனவும் சமீபகாலமாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருவது வருத்தத்தை அளிக்கின்றது எனவும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் ஆய்வாளர் வசந்தி கூறினார்.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.