தேசத் தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்: வீதியில் உலா வந்தவர்களை வியந்து பார்த்த மக்கள்..!!
Author: Rajesh4 February 2022, 1:11 pm
கோவை: கோவையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா போன்ற வேடம் அணிந்த கலைஞர்களுடன் வேட்பு மனு அளித்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். ஆளும் கட்சி, எதிர்கட்சி வேட்பாளர்கள் ஒருபுறம் வேட்பு மனு தாக்கல் செய்துவருகின்ற நிலையில் சுயேட்சைகளும் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலரும், விலங்கு உயிரியல் ஆர்வலருமான ராஜசேகர் என்கிற அஜித் இந்த தேர்தலில் சுயேட்சையாக களம் காண்கிறார்.
போத்தனூர் 95 வது வார்டில் போட்டியிடுகின்ற சுயேட்சை வேட்பாளர் இவர் தேசிய தலைவர்களான நேதாஜி, அண்ணா , அம்பேத்கர், காமராஜர் ஆகிய வேடமணிந்த கலைஞர்களுடன் வந்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தலைவர்களின் கொள்கைகள் மக்கள் மறந்து வருகின்றனர் என்றும், தலைவர்களின் கொள்கைகளை பொதுமக்களிடம் விட்டு செல்லவும், அவர்களின் வழியில் அரசியலில் சேவை செய்யவும் வேட்பாளராக களறங்கியதாக தெரிவித்திருக்கின்றார் .