அங்கன்வாடியை டாஸ்மாக் பார் போல மாற்றி ரீல்ஸ்.. திமுக பிரமுகரின் மகன் கைது.. உடனே பிணை!
Author: Udayachandran RadhaKrishnan23 May 2024, 7:29 pm
அங்கன்வாடியை டாஸ்மாக் பார் போல மாற்றி ரீல்ஸ்.. திமுக பிரமுகரின் மகன் கைது.. உடனே பிணை!
வேலூர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த திமுகவின் வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதா ஞானசேகரன் மற்றும் திமுக வேலூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரனின் மகன் சரண் என்பவர் வெங்கடாபுரம் பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் பார் போல் செட் அமைத்து மலையாள பட காட்சியை ரீகிரியேசன் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இது சர்ச்சையான நிலையில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக அரசு கட்டிடத்தில் அத்திமீரியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் திமுக பிரமுகரின் மகன் சரண் உட்பட 3 பேரை கைது செய்த சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணைக்கு பிறகு காவல் நிலைய பிணையில் அனுப்பினர்.
மேலும் படிக்க: சட்டவிரோதம்.. அப்பட்டமா தெரியுது : தமிழகத்தின் உரிமையை பறிப்பதா? கேரள அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
சாலையில் சொந்த வாகனத்தில் தவறுதலாகவோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ சாகசங்கள் செய்தாலேயே அவர்கள் மீது தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்யும் போலீசார் சிறையில் அடைக்கும் வழக்கு பிரிவுகளை பதிவு செய்யும் போலீசார் ஒரு கல்வி மையத்திற்குள் அதுவும் சிறு பிள்ளைகள் பயிலும் அங்கன்வாடி அரசு பள்ளியில் இது போன்ற போதை பொருள் மற்றும் மது பொருட்களை வைத்து வீடியோ வெளியிட்ட நபரை காவல் நிலைய பிணையில் விடுவித்து இருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சமூக நோக்கர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கும் பொழுது ஆளுங்கட்சியினருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா என்று கேள்வி எழுப்புகின்றனர்…