தகாத உறவை துண்டித்ததால் ஆத்திரம்… முதியவர் வெட்டிக் கொலை : திண்டுக்கல் அருகே பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 8:41 pm

திண்டுக்கல் : சின்னாளப்பட்டி அருகே கள்ளக்காதலால் ஏற்ப்பட்ட தகறாரில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டியில் உள்ள ஆரோக்கிய மாதா தெரு பகுதியில் வசித்து வருபவர் தாமஸ் பால்ராஜ். இவரது மனைவி நிர்மல் நித்யா.

இவர்ளுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். தாமஸ் பால்ராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் தனியாக இருந்த நிர்மல் நித்யாவுக்கு உதவியாக குட்டத்து ஆவரம்பட்டியில் உள்ள நிர்மல் நித்யாவின் தந்தை அருள்நாதன் மகளுடன் வந்து தங்கி உள்ளார்.

இந்நிலையில் பஞ்சம்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர் என்பவருக்கும் நிர்மல் நித்யாவுக்கும் இடையே சில மாதங்களாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக சந்திரசேகருடன் இருந்த தொடர்பை நிர்மல் நித்யா துண்டித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் நிர்மல் நித்தியா வீட்டிற்க்கு வந்து தன்னோடு தொடர்பில் இருந்தபோது தன்னிடம் வாங்கிய பணம், மற்றும் பொருட்களை திருப்பி தருமாறு கேட்டு தகறாரில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

நேற்று மாலை வழக்கம் போல் சந்திரசேகர் நிர்மல் நித்யா வீட்டிற்கு வந்தார். பின்னர் தன்னிடம் வாங்கிய பணத்தை தருமாறு கேட்டு வாக்குவாதம் செய்தார். அப்போது அங்கு வந்த நிர்மல் நித்யாவின் தந்தை அருள்நேசன் அடிக்கடி வந்து என் மகளுடன் தகறாறு செய்வதா என கூறி அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்க சந்திரசேகரை தாக்க முயன்றார்.

சுதாரித்துக் கொண்ட சந்திரசேகர் அங்கிருந்து தப்பி தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். ஆட்டோவை விரட்டி சென்ற அருள்நேசன் ஆட்டோவின் முன்பக்கம் சென்று ஆட்டோவின் கண்ணாடியை அடித்து உடைத்தார். இதில் ஆட்டோ தலைகீழாக சாலையில் கவிழ்ந்தது.

அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் ஆத்திரத்துடன் எழுந்து வந்தார். பின்னர் அருள்நேசன் வைத்திருந்த கட்டையை சந்திரசேகரின் பிடுங்கினார். பின்னர் அருள்நாதன் தலையில் சந்திரசேகர் தாக்கினார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டு அருள்நேசன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். ஆட்டோ டிரைவர் சந்திர சேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனை தொடர்ந்து மகள் நிர்மல் நித்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருள் நேசனை தூக்கி கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே அருள்நேசன் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்து வந்த சின்னாளபட்டி போலீசார் கொலை குறித்து வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய ஆட்டோ டிரைவர் சந்திரசேகரை பஞ்சம்பட்டியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது பிடித்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தகாத உறவால் ஏற்பட்ட கொலையால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சின்னாளப்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக கொலை நடந்தேறி வருவது திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் மக்களுடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 884

    0

    0