ஆவேசமடைந்த காட்டெருமை… ஸ்கூட்டரை முட்டித் தூக்கி வீசிய சம்பவம் ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!
Author: Babu Lakshmanan13 December 2023, 7:34 pm
குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை காட்டெருமை தூக்கி எரியும் சம்பவம் வைரலாகி வரும் நிலையில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானல் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் யானை காட்டு மாடு குரங்கு காட்டுப்பன்றியால் தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களை தாக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதிகளில் பகல் நேரத்திலேயே காட்டு மாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து குடியிருப்பு பகுதியில் உள்ள வாகனங்களை சேதப்படுத்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சீனிவாசபுரம் பகுதி உள்ள வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை காட்டுமாடு ஒன்று முட்டி தூக்கி வீசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் யாராவது தெரியாமல் காட்டு மாடிடம் சிக்கிவிட்டால் அவர்களின் நிலை என்ன..? உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு தான் நடவடிக்கை எடுப்பார்களா..? வனத்துறை என்ற கேள்வியும் தற்போது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.